குண்டு வைக்கவும் தெரியும்,சண்டை போடவும் தெரியும்.! பாஜக போராட்டத்தில் தமிழக அரசை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்

ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முன்னாள் ராணுவ வீரர், எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும், துப்பாக்கியால் சுடவும் தெரியும் எனவே அதனை செய்ய வைக்காதீர்கள் என தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

An ex army man speech threatening the Tamil Nadu government during the BJP protest has created controversy

ராணுவ வீரர் கொலை

கிருஷ்கிரி மாவட்டம் போச்சம்பள்ளி  பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகர், இவர் குடிநீர் தண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதிக்கு வந்த வார்டு கவுன்சிலர்  சின்னசாமி (50) பொது தண்ணீர் தொட்டி உள்ள இடத்தில்  துணி துவைக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராணுவ வீரர் பிரபாகரன் கவுன்சிலர் சின்னச்சாமியை தாக்கியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து  சின்னசாமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று ராணுவ வீரர் பிரபு அவரது அண்ணன் மற்றோரு ராணுவவீரர் பிரபாகரன், தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன், ஆகிய நான்கு பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பிரபு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

ராணுவ வீரர் கொலை..! திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அண்ணாமலை

பாஜக போராட்டம்

ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக கவுன்சிலர் சின்னச்சாமி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் ராணுவ வீரருக்கு தமிழகத்தில் பாதிகாப்பு  இல்லையன கூறி பாஜக சார்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே  முன்னாள் ராணுவ பாஜகவினர் பிரிவு சார்பாக உண்ணாவிரத  போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீர்ர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். அப்போது பேசிய ஒரு முன்னாள் ராணுவ வீரர், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், உலகத்திலேயே மிகப்பெரிய ஒழுக்கமான ராணுவம் இந்திய ராணுவம், ராணுவ வீரர்கள் ஒழுக்கத்திற்கு பெயர் போனவர்கள், அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல,

An ex army man speech threatening the Tamil Nadu government during the BJP protest has created controversy

குண்டு வைப்போம்- சர்ச்சை பேச்சு

நாங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஒழுக்கமாக செய்பவர்கள், அப்படிப்பட்ட எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், ஆகையினால் இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள் என தமிழக அரசு எச்சரிக்கை செய்வதாக கூறினார். குண்டு வைப்போம் என முன்னாள் ராணுவ வீரரின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரிக்கை..! தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios