Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி..? மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா- ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரை வைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை பாஜக ஆளும் மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Amutha IAS-Vijayakumar IPS governor rule in Tamil Nadu ..? plan put up by the central government
Author
Tamil Nadu, First Published Jul 24, 2020, 1:15 PM IST

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா- ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரை வைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை பாஜக ஆளும் மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் வருகின்ற 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஓராண்டுக்கு ஆளுநர் ஆட்சி நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. மத்தியில் நடைபெற்று வரும் சில அதிரடி மாற்றங்கள் இதனை உறுதி செய்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இன்னும் ஓராண்டுகள் ஆகக்கூடும். அப்படியே கட்டுக்குள் கொண்டு வந்தாலும் கட்டுப்பாடுகள் தற்போது போன்று தொடரும் என கூறப்படுகிறது.

Amutha IAS-Vijayakumar IPS governor rule in Tamil Nadu ..? plan put up by the central government

கொரோனா காரணமாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் அரசு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலை தள்ளிவைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் இருப்பதால் அதற்கு பின் ஆறு மாதம் ஆளுனர் ஆட்சியும், தேவைப்பட்டால் மீண்டும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னேற்பாடாக தமிழகத்தில் அதிகாரத்தில் ஆளுமை மிக்கவர்களாக வந்தவர்களை முக்கியப் பதவிகளில் இருந்து வந்தவர்களை மத்திய அரசு முக்கியப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. Amutha IAS-Vijayakumar IPS governor rule in Tamil Nadu ..? plan put up by the central government

அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை தற்போது பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு அறிவித்துள்ளது. திமுக- அதிமுக ஆட்சிகளிலும் உணவு பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் உட்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர் அமுதா. திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கின் போது எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் முறையாக நடத்தி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றவர். Amutha IAS-Vijayakumar IPS governor rule in Tamil Nadu ..? plan put up by the central government

தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் பாதுகாப்பு விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டு தனது பணியை சிறப்பாக ஆற்றி வருகிறார். இவர் சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்தியவர். இந்நிலையில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல் படுத்தப்படும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஐபிஎஸ் மற்றும் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் ஆலோசனைப்படி தமிழகத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் நடக்கும் என்றும் இதில் எந்த ஒரு முடிவும் சாதக பாதகங்களை முன் கூட்டியே கணிக்கக் கூடிய வகையில் தமிழக அரசியல் களம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், மக்கள் மனநிலை எப்படி பிரதிபலிக்கும் என்பதை இவர்களின் ஆலோசனைப்படி தமிழகத்தில் ஒரு வருடம் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios