அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினமான வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக அக்டோபர் 6ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று காலை முதல் வெற்றிவேலின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 6.40 மணிக்கு வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெற்றிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பதிவில்;- பெரம்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அவர்சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.