கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு, மிகத் தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள திமுக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கிறதோடு, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.முன்னதாக, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை காக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில் உரிமையை விட்டு கொடுக்கக்கூடாது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்துகிறார்கள். தண்ணீருக்காக ஒரு பக்கம் கேரளாவுடனும், மறுபக்கம் கர்நாடகாவுடன் கையேந்தும் நிலையில் உள்ளது.நம்முடைய மகன், பேரன் வரை காவிரி போராட்டம் முடியாதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவிரி விவகாரத்தில் தோற்றோம் என்றால் வருங்கால தலைமுறையினர் நம்மை சபிக்கும்.

காவிரி பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான பிரச்னை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த 2018 பிப்., 16 அன்று அளித்த தீர்ப்பை மதிக்காமல் சம்பந்தப்பட்ட மாநில அனுமதியையும், மத்திய அரசு அனுமதியையும் பெறாமல் அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வரும் கர்நாடக அரசிற்கு தமிழக சட்டசபையின் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு எந்தவித தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் அனுமதியையும் தரக்கூடாது என மத்திய அரசை கேட்டு கொள்வதாக அவர் கூறினார்

மேலும் படிக்க: தண்ணீருக்காக கையேந்துகிறோம்.. காவிரி போராட்டத்தில் தோற்றால்..? சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்