Asianet News TamilAsianet News Tamil

திமுகவுடன் டி.டி.வி.தினகரன் ரகசிய கூட்டு..? உண்மையை போட்டுடைத்த தங்க தமிழ்செல்வன்..!

திமுகவுடன் அமமுக ரகசிய கூட்டு அமைத்து அதிமுக ஆட்சியை கலைக்கப்பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளார் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன்.
 

Ammk secret partnership with DMK ?
Author
Tamil Nadu, First Published May 8, 2019, 12:23 PM IST

திமுகவுடன் அமமுக ரகசிய கூட்டு அமைத்து அதிமுக ஆட்சியை கலைக்கப்பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளார் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன்.Ammk secret partnership with DMK ?

இந்த தேர்தலை அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தலாக பார்க்கிறோம். திமுகவும் நாங்களும் சேர்ந்தால் தான் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடியும் என தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். இது குறித்து விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ’’திமுகவுடன், அமமுக கூட்டு வைத்துள்ளது தங்கத்தமிழ்செல்வன் மூலம்  வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்து இருந்தார். அமைச்சர்களும் இதுகுறித்து அமமுக மீதும் தினகரன் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.Ammk secret partnership with DMK ? 

இந்நிலையில் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன் பேசும்போது, ‘’எம்ஜிஆர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி என்று சொன்னீர்களே? ஏன் ஜானகி ஆட்சியை கலைத்தீர்கள். ஜெயலலிதா நல்லவர், ஜானகி ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள் அல்ல. எனவே அந்த ஆட்சியை கலைத்துவிட்டு ஜெயலலிதாவை கொண்டுவரத்தான் அவரை அமரவைத்தோம், உண்மைதானே.Ammk secret partnership with DMK ?

இன்றைக்கு அதிமுக ஆட்சி, அம்மா ஆட்சி என சும்மா சொல்கிறீர்கள். ஊழல் ஆட்சிதான் நடக்கிறது. துரோகிகள் ஆட்சி நடக்கிறது. டி.டி.வி.தினகரனை முதல்வராக்க இந்த ஆட்சியை கலைப்போம். கலைப்பது தப்பில்லையே? இந்த இடைத்தேர்தலில் 22 சீட்டு வென்றோம் என்றால் நாளைக்கு எடப்பாடி நம்பிக்கை கோரும் தீர்மானம் கவனரிடம் கொடுக்க வேண்டும். அப்போது நாங்க அதிமுகவுக்கு எதிராகத்தான் ஓட்டு போடுவோம். திமுகவும், அதிமுகவிற்கு எதிராக ஓட்டுப்போடும். காங்கிரசும் எதிராக தானே ஓட்டு போடும், முஸ்லீம் லீக்கும் எதிராக தானே ஓட்டுப்போடும். அப்போ நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தமா? பிறகு ஏன் நான் சொன்னது தப்பு என்று சொல்கிறீர்கள்?’’ என விளக்கமளித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios