Asianet News TamilAsianet News Tamil

என்னை கட்சியில் இருந்து நீக்கினால் உங்களுக்கு பேரழிவு தான்... டி.டி.வி.தினகரனுக்கு புகழேந்தி எச்சரிக்கை..?

என்னை கட்சியை விட்டு நீக்கினால் அமமுகவிற்கு பேரழிவு என பெங்களூர் புகழேந்தி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள சூழலில் வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை டிடிவி.தினகரன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று புகழேந்தி கூறினார்.

AMMK Pugazhendhi Warning
Author
Tamil Nadu, First Published Sep 10, 2019, 2:43 PM IST

என்னை கட்சியை விட்டு நீக்கினால் அமமுகவிற்கு பேரழிவு என பெங்களூர் புகழேந்தி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள சூழலில் வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை டிடிவி.தினகரன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று புகழேந்தி கூறினார்.

அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்த புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளராக தற்போது இருந்து வருகிறார். இந்நிலையில், அமமுக மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சியில் இருந்து ஏராளமான செந்தில்பாலாஜி, கலைராஜன், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்த வண்ணம் இருந்தனர். தற்போது டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக புகழேந்தி, வெற்றிவேல், பழனியப்பன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். AMMK Pugazhendhi Warning

இந்நிலையில், புகழேந்தியும் டி.டி.வி. மீதான அதிருப்தி காரணமாக கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை புகழேந்தி தனியார் ஓட்டலில் நேரில் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், டிடிவி.தினகரனை அடையாளம் காட்டியதே தான் என புகழேந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இது அமமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

AMMK Pugazhendhi Warning

இது தொடர்பாக புகழேந்தி கூறுகையில், நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கவே நான் அவர்களை சந்தித்தேன். இதை தவறாக எடுத்து அமமுக தொழில்நுட்ப பிரிவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. எனக்கு தெரியாமல் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது என்றார். 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும். தினகரன் என்னை போ என்றால் சசிகலா என்னை வா என்பார். சசிகலா வந்த பின்னர் நிலைமை மாறும். விடை கிடைக்கும். தினகரனின் நிர்வாகத்திலும், நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை. கட்சியில் இருக்கும் கொஞ்சம்பேரையும் இழந்துவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.

 

 AMMK Pugazhendhi Warning

மேலும், பேசுகையில், கோவையில் நான் பேசியது உண்மைதான். ஆனால் நான் பேசிய பேச்சு எடிட் செய்யப்பட்டு உள்ளது. கட்சியின் தகவல் தொழில்நுட்பு பிரிவு நிர்வாகிகள் தான் எனக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர். என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு தான் பேரிழப்பு என புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios