Asianet News TamilAsianet News Tamil

அ.தி.மு.க.,காரரை மாட்டிவிட்ட அமமுக வேட்பாளர்... டி.டி.வி.., பாணியில் ஏமாற்றியதால் வழக்கு..!

ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் டோக்கன் கொடுத்து ஏமாற்றியதை போல கும்பகோணம் தொகுதியில் அமமுக வேட்பாளர் டோக்கன் கொடுத்து ஏமாற்றியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

AMMK Party candidate who got caught in the token
Author
Tamil Nadu, First Published Apr 8, 2021, 9:52 AM IST

ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் டோக்கன் கொடுத்து ஏமாற்றியதை போல கும்பகோணம் தொகுதியில் அமமுக வேட்பாளர் டோக்கன் கொடுத்து ஏமாற்றியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் கடந்த 2016 தேர்தல் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் 86,048 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் ரத்னா சேகர் 76,591 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.AMMK Party candidate who got caught in the token

தற்போதைய 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. மூமுக கட்சியின் ஸ்ரீதர் வாண்டையார் இத்தொகுதியில் போட்டியிட்டார். திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனே களம் இறங்கினார். அமமுக சார்பில் எஸ்.பாலமுருகன் களமிறங்கினார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கோபாலகிருஷ்ணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்தும் களமிறங்கினர்.

வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடந்து முடிந்துள்ள நிலையில் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எழுந்திருக்கிறது.கும்பகோணம் தொகுதியில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வாக்காளர்களூக்கு அமமுக சார்பில் 2ஆயிரம் ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டது. அதேநேரம் இந்த டோக்கனே போலி டோக்கன் என்று தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட கடையில் சென்று எல்லோரும் டோக்கனை கொடுத்தபோது, டோக்கனுக்கும் தனது கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். 200க்கும் மேற்பட்டோர் இப்படி வந்து ஏமாந்து திரும்பி செல்லவும், கடையின் உரிமையாளர் ஷேக்முகமது, வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் எங்களூக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று எழுதி ஒட்டினார். இது பெரும் பரபரப்பானது.AMMK Party candidate who got caught in the token

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் அமமுக வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த தொகுதி மக்களுக்கு இன்னமும் பணம் போய் சேரவில்லையாம். கும்பகோணத்திலும் அந்த டெக்னிக்தான் நடந்துள்ளது. அமமுகவின் டோக்கனும் ரொம்ப பிரபலம் ஆகி வருகிறது.AMMK Party candidate who got caught in the token

இந்நிலையில், கும்பகோணத்தில் அமமுக பிரமுகர் கனகராஜ், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios