காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம்  அமமுக நகர செயலாளர் பாலமுருகன் அச்சிறுப்பாக்கம் பாஜார் வீதியில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவர் அச்சிறுப்பாக்கம் நகரில் டி கடை நடத்தி வருகிறார். இவர் இன்று அதிகாலை சுமார் 5.00 மணிக்கு கடை திறப்பதர்க்காக பஜாருக்கு வரும் போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் பஜார் வீதியில் சரிமாறிவெட்டி கொலை செய்து விட்டு இருசக்கர வனத்தில் தப்பியோடி விட்டனர்.

இதனால் இப்பகுதியில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை கடை அடைப்பு செய்ய உள்ளதாக வணிகர் சங்கம் அறிவித்து உள்ளது.  இதனைத் தொடர்ந்து கொலை சம்மந்தமாக அச்சிறுப்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதே போல கடந்த ஜூன் மாதம் மதுரை காமராசர்புரம் அமமுகவின் வட்டச் செயலராக இருந்த முனியசாமி 4 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இப்படி தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் மீது கொலைவெறி சம்பவங்கள் நிகழ்த்துவதாக அமமுக தொண்டர்கள் கொந்தளித்துள்ளார்கள்.