Asianet News TamilAsianet News Tamil

BREAKING திடீர் திருப்பம்.. உறுதியாகிறது அமமுக - தேமுதிக கூட்டணி? ஆளுங்கட்சியை அலறவிடும் தினகரன்..!

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக கட்சி அமமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அரசியல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. 

AmmK - DMDK Alliance... edappadi palanisamy shock
Author
Chennai, First Published Mar 10, 2021, 12:42 PM IST

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக கட்சி அமமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அரசியல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. 

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.  தாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வராததால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறினர். மேலும், அதிமுகவுக்கு இனி இறங்கு முகம் தான் என எல்.கே.சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரன் ஆகியோர் கடுமையான விமர்சனம் செய்திருந்தனர்.

AmmK - DMDK Alliance... edappadi palanisamy shock

இந்நிலையில், தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஸ் ஆகியோரை நேரில் சந்தித்து இது குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், எந்த கட்சியுடனும் தேமுதிக கூட்டணி அமைக்காது என்றும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் எனறும், அதற்கான வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

AmmK - DMDK Alliance... edappadi palanisamy shock

இந்நிலையில், அமமுக தேமுதிக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன், தேர்தல் பொறுப்பாளர் மாணிக்கராஜாவுடன் தேமுதிகவைச் சேர்ந்த பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவன் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேமுதிக தரப்பில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், இந்த தொகுதி பங்கீட்டுக்கு ஒப்புக் கொண்டால் வெளிப்படையாக தேமுதிக-அமமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது குறித்து முடிவெடுக்கும் எனவும், தேமுதிக தரப்பில் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios