Asianet News TamilAsianet News Tamil

’புதிய இந்தியா பொறந்தமாதிரிதான்’...பட்ஜெட்டை நக்கலடிக்கும் டிடிவி தினகரன்...

‘வெறும் வார்த்தைகளில் விவசாயிகளைப் புகழ்ந்துவிட்டால் போதும்..நாடு முழுவதும் பெரும் வறட்சி நிலவும் நிலையில், விவசாயத்திற்கு சிறப்பு திட்டங்களோ நிதி உதவிகளோ செய்யவேண்டியதில்லை’ என மத்திய அரசு நினைக்கிரதுபோலும்’என்று மத்திய அர்சின் பட்ஜெட்டை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ammk dinakaran criticises todays budget
Author
Chennai, First Published Jul 5, 2019, 5:01 PM IST

‘வெறும் வார்த்தைகளில் விவசாயிகளைப் புகழ்ந்துவிட்டால் போதும்..நாடு முழுவதும் பெரும் வறட்சி நிலவும் நிலையில், விவசாயத்திற்கு சிறப்பு திட்டங்களோ நிதி உதவிகளோ செய்யவேண்டியதில்லை’ என மத்திய அரசு நினைக்கிரதுபோலும்’என்று மத்திய அர்சின் பட்ஜெட்டை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.ammk dinakaran criticises todays budget

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் குறித்து, கருத்து வெளியிடுள்ள டிடிவி தினகரன்,’வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தேவையான திட்டங்கள் இல்லாமல் முரண்பாடுகளின் தொகுப்பாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.கழிவுகளை அகற்ற மனிதர்களுக்குப் பதிலாக எந்திரங்களும் ரோபோக்களும் களமிறக்கப்படும், மின்சார வாகன தயாரிப்புக்கு முக்கியத்துவம் போன்ற சில அறிவிப்புகள் வரவேற்பிற்குரியவை. சிறு, குறு வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம், வீட்டுக் கடனுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.50 லட்சத்திற்கு வருமான வரி விலக்கு உள்ளிட்டவை அந்தந்தப் பிரிவினருக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.

பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது, விலைவாசியை அதிகப்படுத்தி மக்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். ரெயில்வே துறையை தனியார்மயமாக்க அறிவிக்கப்பட்டுள்ள ரூ.50 லட்சம் கோடி முதலீடு திட்டம் பெரும் கவலை அளிக்கிறது.நாடு முழுவதும் பெரும் வறட்சி நிலவும் நிலையில், விவசாயத்திற்கு சிறப்பு திட்டங்களோ நிதி உதவிகளோ இல்லாமல் வெறும் வார்த்தைகளில் விவசாயிகளைப் புகழ்ந்துவிட்டால் போதும் என அரசு நினைத்துவிட்டதாக தெரிகிறது. ammk dinakaran criticises todays budget

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.மொத்தத்தில் புதிய இந்தியா என்ற கனவு வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லி, அதற்காக புதுப்புது பெயர்களில் திட்டங்களை மட்டும் அறிவித்துவிட்டால் புதிய இந்தியா பிறந்துவிடும் என்று இந்த அரசு நினைப்பது, வெறும் பகல் கனவாகவே இருந்துவிடுமோ என்ற அச்சத்தை இந்த பட்ஜெட் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது’என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios