வரும் ஏப்ரல், தே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதே போல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேமுதிகவுடன் அந்த கட்சி கூட்டணி பேச்சு நடத்தி வருகிறது.


இதனிடையே மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்தனியா தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. வரும் 24 ஆம் மேதி கமல்ஹாசன் இதில் முக்கிய முடிவு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமமுக இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் அமமுக போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். வரும் 28 ஆம் தேதிக்குப் பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது கூட்டணி குறித்து எதுவும் யோசிக்கவில்லை என்றும்,  ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டாரகள் என கூறினார். 

அதனால் கண்டிப்பாக தேமுதிகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும்அந்தக் கட்சியுடன் கூடடணி குறித்து பேசவில்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.

அதே போல் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. நாங்கள் பாமகவிற்கு எதிரான கட்சி. பாமகவுக்கு எந்த நிலைப்பாடோ, அதே நிலைப்பாடு தேமுதிகவுக்கும் தான்.
 
அதே நேரத்தில்  மக்களால் விமர்சிக்கப்படாத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். தமிழக மக்கள் சிறு சொல்லால் கூட விமர்சித்திராத ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்பதே என் விருப்பம் என தெரிவித்தார்.