அடையாள அட்டை குழப்பத்தால் கடலூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் சின்னம் ஒதுக்கப்படாததால் அதிரிபுதிரியாக அமமுக வேட்பாளர்கள் நேற்று 2-3 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அவசரஅவசரமாக இவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததில் சில குளறுபடிகளும் நிகழ்ந்து இருக்கிறது.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. அதில் சிலரது மனுக்கல் நிராகரிக்கப்பட்டது. கடலூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேட்பாளர் கார்த்திக்கை முன்மொழிந்தவர்களின் அடையாள அட்டையில் மாற்றம் உள்ளதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டையில் சில மாற்றம் உள்ளதால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போதே போதே ஒவ்வொரு கட்சி சார்பாகவும் டம்மி வேட்பாளர் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்வது வழக்கம். அதன்படி அமமுக சார்பாகவும் மற்றொரு நபர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆகையால், கார்த்திக்கின் மாற்று வேட்பாளராக அமமுக மற்றொரு வேட்பாளரை களமிறக்க உள்ளது.