Asianet News TamilAsianet News Tamil

திக்குத்தெரியாமல் சிக்கித் தவிக்கும் தேமுதிக... அமமுகவுடன் கூட்டணியா?... டி.டி.வி. தினகரனின் பளீச் பதில்...!

அதன் பின்னர் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிரேமலதா விஜயகாந்த் 234 தொகுதிகளும் தேமுதிக தனித்து போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்தார். 

AMMK and DMDK alliance current situation
Author
Chennai, First Published Mar 12, 2021, 12:59 PM IST

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக, பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், நிச்சயம் தேமுதிகவும் அங்கு தான் இடம்பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியதால் தங்களுக்கும் அதே அளவிற்கு தொகுதிகள் வேண்டுமென தேமுதிக அடம்பிடிக்க ஆரம்பித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்பட்டாத நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக தேமுதிக  அறிவித்தது. 

AMMK and DMDK alliance current situation

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என பொன்ராஜ் ஓபனாகவே அறிவித்தார். இந்நிலையில்,விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனோ, நாங்க தான் சீனியர் கமலுடன் கூட்டணி வைத்தால் எங்களுக்கு நல்லா இருக்காது. நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என பேசினார். 

AMMK and DMDK alliance current situation

அதன் பின்னர் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிரேமலதா விஜயகாந்த் 234 தொகுதிகளும் தேமுதிக தனித்து போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தேமுதிக நிர்வாகிகள் தனித்து போட்டியிட தயாராக இல்லாத நிலையில், மீண்டும் அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

AMMK and DMDK alliance current situation

இந்நிலையில் இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமமுக தலைவர் தினகரன் நேரில் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைக்குமா? என்பது குறித்து இன்று தெரிய வரும் என்று பதிலளித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios