சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் பகுதி அமமுக கட்சியைச் சேர்ந்த மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுக களத்தில் இறங்கி தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக, அமமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை திமுக இணைக்கும் வேலைகளில் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்  தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., கொளத்தூர் கிழக்கு பகுதிச் செயலாளர் ஐசிஎப் முரளிதரன், தலைமைக் கழக வழக்கறிஞர் கே.சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.