அம்மா மக்கள் முன்னேற்ற கழக தென்சென்னை கிழக்கு, தென்சென்னை தெற்கு நிர்வாக வசதிக்காக கழக அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு கீழ்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: அம்மா மக்கள் முன்னேற்ற கழக தென்சென்னை தெற்கு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கழக பணிகளை விரைவுபடுத்திடும் வகையில் தென்சென்னை கிழக்கு, தென்சென்னை தெற்கு, செங்கல்பட்டு வடக்கு என கழக அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு கீழ்காணும் சட்டமன்றத்தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

1. தென்சென்னை கிழக்கு  மாவட்டம் 

* சோழிங்கநல்லூர்
* வேளச்சேரி 

2. தென்சென்னை தெற்கு மாவட்டம் 

* சைதாப்பேட்டை 
* மயிலாப்பூர்

3. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்

* தாம்பரம்
* பல்லாவரம்
* ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிகளாக செயல்படும். 

தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் நீலாங்கரை வி.சி.முனுசாமியும், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக கட்சி துணை பொதுச்செயலாளர் G.செந்தமிழன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் ம.கரிகாலன் தொடர்ந்து செயலாற்றுவார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக செயலாருக்கு கழக உடன்பிறப்புகள் ழுமு ஒத்தழைப்பு நல்கிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.