அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் 2 ஆவது பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேனி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் களம் இறங்குகிறார். 

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல நடைபெறுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணிகள் களம் இறங்கியுள்ளன. இதினிடையே அமமுக சார்பில் டி.டி.வி.தினகரன் இத் தேர்தலில் தனி அணியாக களம் இறங்குகிறார்.

தினகரன் ஏற்கனவே 24 மக்களவை மற்றும் 9 சட்டமன்ற தேர்லுக்கான வேட்பாளர் பட்டிலை அறிவித்துள்ளார். இந்நிலையில் அமமுகவின் இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ்செல்வன், பழனியப்பன் மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு எம்.பி,.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள மக்களவை மற்றும் 9 சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல்….

தேனி- தங்க தமிழ்ச்செல்வன்
வடசென்னை - சந்தான கிருஷ்ணன், 
கிருஷ்ணகிரி - கணேஷ் குமார்
வேலூர் -பாண்டு ரங்கன்
தர்மபுரி - பழனியப்பன்
திருவண்ணாமலை - ஞானசேகர்
ஆரணி- செந்தமிழன்

கள்ளக்குறிச்சி- கோமுகி மணியன்
திண்டுக்கல்- ஜோதி முருகன்
கடலூர் -கே.ஆர். கார்த்திக்
விருதுநகர்- பரமசிவ ஐயப்பன்
தூத்துக்குடி - புவனேஷ்வரன்
கன்னியாகுமரி - லெட்சுமணன்
அரக்கோணம்- பார்த்திபன்

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்

சோழிங்கர் தொகுதி- டிஜி மணி
பாப்பிரெட்டி பட்டி- டிகே ராஜேந்திரன் 
நிலக்கோட்டை- ஆர். தங்க துரை
திருவாரூர்- காமராஜ்
தஞ்சாவூர்- ரெங்கசாமி
ஆண்டிப்பட்டி- ஜெயக்குமார்
பெரியகுளம்- கதிர்காமு
விளாத்திக்குளம்- ஜோதிமணி
தட்டாஞ்சவடி (புதுச்சேரி) ; என் முருகசாமி