அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தி பெயர் பலகையை கிழித்த திமுகவினர் 2 பேரை கட்சியில் இருந்து நீக்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தி பெயர் பலகையை கிழித்த திமுகவினர் 2 பேரை கட்சியில் இருந்து நீக்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரிரு நாளில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை முகப்பேரில் உள்ள 10வது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் இன்று காலை சென்ற திமுகவினர் சிலர் அங்கிருந்த பெயர்பலகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். அத்துடன் உணவகத்தில் இருந்த உணவுப் பொருட்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

இது குறித்த வீடியோ வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாகவே திமுகவினர் வன்முறை அராஜகத்தில் தொடங்கி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், அம்மா உணவகத்தின் பெயர் பலகையை கிழித்த திமுகவினர் 2 பேரை நீக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Scroll to load tweet…

இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் டுவிட்டர் பக்கத்தில்;- “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்…” என்று பதிவிட்டுள்ளார். தவறு நடந்ததாக தெரியவந்த சில மணிநேரத்தில் புதியதாக ஆட்சியில் அமரவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.