Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் கொடுத்த ஆலோசனை..!! இவ்வளவு அக்கறையா..!!

ரேஷன் கார்டுதாரர்கள்  மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 1000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 1000 ஆகியவை முழுமையாக சென்றடைவதை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.

amma makal munnatra kazagam party ttv dinakaran advice to government
Author
Chennai, First Published May 1, 2020, 2:39 PM IST

ஊரடங்கை  நீட்டித்தால் ஏழை எளிய மக்களுக்கு கூடுதல் உதவித் தொகை வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் அவர் ,  கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு கட்ட ஊரடங்கு பெரும்பாலான மக்கள்  அளித்த ஒத்துழைப்பால்  தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் தொற்று  ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது .  ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அரசு வெளியிட்ட சில அவசரகோல உத்தரவு காரணமாக மக்களிடம் ஏற்பட்ட பீதி கலந்த பயத்தினால் ஊரடங்கு என்பது அர்த்தமற்றதாக மாறியது. ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதனை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவது நல்லதல்ல படிப்படியாகவே தளர்த்த வேண்டும் என்று மருத்துவ வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை அளித்திருக்கிறது . 

amma makal munnatra kazagam party ttv dinakaran advice to government

சென்னையில் நாள்தோறும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிப்பதை பார்த்தால் அது சரி என்றே படுகிறது .  அப்படி ஊரடங்கு நீட்டிக்கும் முடிவை அரசு எடுக்கும் போது மக்களுக்கு குழப்பம் ஏற்படாத படி முன்கூட்டியே தெளிவான நடை முறைகளோடு அறிவித்திட வேண்டும் ,  மேலும் ஏழை எளிய அடித்தட்டு மக்களை தொடர் ஊரடங்கு மொத்தமாக புரட்டிப் போட்டிருக்கிறது ,  அவர்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதே பெரும் சவாலாகவே இருக்கிறது எனவே ஊரடங்கு நீட்டிக்கப்படும் பச்சத்தில் ஏழை எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் .  ரேஷன் கார்டுதாரர்கள்  மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 1000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 1000 ஆகியவை முழுமையாக சென்றடைவதை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். 

amma makal munnatra kazagam party ttv dinakaran advice to government

தற்போது ஊரடங்கு நீடித்தால் கூடுதல் உதவியாக குறைந்தபட்சம் மேலும் 2000 ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக வழங்க வேண்டும் , இதற்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கூடுதல் நிதியை கேட்டுப் பெற வேண்டும் ,  பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என முதலமைச்சர் பழனிசாமி விட்டுவிடக்கூடாது சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் மக்கள் கூடுவதை தடுக்காவிட்டால் கொரோனா பரவலை தடுப்பதில் பெரும் சவால் ஆகிவிடும் என்பதை இப்போதாவது அரசு உணர வேண்டும் ,  அத்தியாவசிய பொருட்கள் அனைத்து வீட்டு வாசலிலேயே கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தாத வரை இது சாத்தியமில்லை அரசின் அமுதம் அங்காடிகள் பண்ணை பசுமை காய்கறி கடைகள் ஆகியவற்றை அரசு சிற்றுண்டிகள் பேருந்துகளை பயன்படுத்தி நடமாடும் கடைகளாக மாற்றுவதோடு அந்தந்த பணியில் உள்ள வணிகர்களை இணைத்து  திட்டத்தை செயல்படுத்த வேண்டும்  இதன் மூலம் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுவதை கட்டுப்படுத்த முடியும் .

amma makal munnatra kazagam party ttv dinakaran advice to government

அனைவரும் வீட்டிலேயே இருங்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கே வரும் என்ற நிலையை உருவாக்கிட தெளிவான திட்டமிட வேண்டும் சோதனைகளை அதிகப்படுத்தியதாள் பாதிக்கப்பட்டவர்களை அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்க முடிகிறது என்ற உண்மையை  மருத்துவ குழுவினர் இப்போது சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் ,  இந்த நேரத்திலாவது மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெரிய நகர பகுதிகளிலும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் , மக்களும்  தங்களின் பொறுப்பை உணர்ந்து ஊரடங்கு கால கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் ஊரடங்கு  நீடிக்கும் நேரத்தில் அதன் தாக்கம் குறைந்த பிறகும்கூட ஒரு புதிய இயல்பு வாழ்க்கையை வாழ தயாராகும்படி உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருப்பதை மக்கள் கவனத்தில் கொண்டு அந்த வாழ்க்கையை வாழ தயாராக வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios