எதிர்கட்சிகளுக்கு மடியில் கனம் இல்லை எனவே பயப்பட தேவையில்லை, ஊழல் அதிமுகவிற்கு அமித்ஷா வருகை அச்சத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர்  இந்திரா காந்தியின் 104வது பிறந்தநாளையொட்டி, தமிழக காங்ரஸ் கமிட்டி தலைமை அலுவலகமாகன சத்தியமூர்த்திபவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருத்த அவரின் உருவப்பட்த்திற்கு முன்னாள் காங்ரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ளது என்றார். 

ஏர்கலப்பை பேரணி மூலம் கிராமம்தோறும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தசட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வோம் என்றார். பாஜக தலைவர் எல்.முருகன் குறிபிட்டது போல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை எதிர்கட்சிகளை ஒருபோதும் அச்சப்படுத்தாது. எதிர்கட்சிகளுக்கு  மடியில் கனம் இல்லை. 

 

மாறாக ஊழல் அதிமுகவிற்கு அமித்ஷா வருகை அச்சத்தை ஏற்படுத்தும் என்றார். தற்போதைக்கு எத்தனை தொகுதிகள் என்ற எண்ணிக்கை முக்கியமில்லை தமிழகத்தில் திமுக மிகப்பெரிய கட்சி அதில் அங்கம் வகிக்கும் காங்ரஸ் தேசிய கட்சிகளில் பெரியகட்சி எனவே நாடாளுமன்ற தேர்தல் வெற்றி  சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார், 

இடைதேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை, அது பணம் மற்றும் அதிகார பலத்தால் கிடைப்பது என்றார். பீகார் தேர்தல் களம் என்பது வேறு தமிழகம் என்பது வேறு என குறிபிட்ட அவர் தமிழகத்தில் ஒருபோதும் சாதி மதத்தை வைத்து ஓட்டு வாங்க முடியாது என்றார். இதனை தொடர்ந்து தமிழக மகளிர் காங்ரஸ் சார்பில் நடைபெற்ற  சமூக வளைதள முகாமினை அகில இந்திய மகிலா காங்ரஸ் தலைவர் சவுமியா ரெட்டி தொடங்கிவைத்தார்.