ஜம்மு மேட்டரை முடித்த கையோடு தமிழகம் விரையும் அமித்ஷா...! 11 ஆம் தேதி காத்திருக்கும் டிவிஸ்ட்...!

ஜம்முகாஷ்மீர் சிறப்பு ஆந்தஸ்த்தை நீக்கிய கையோடு மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகைதர உள்ளார், இது தமிழக மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதுடன், அதை பாராளுமன்றத்தில் சட்டமாகவும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது, இது சர்வதேச அளவில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்திஉள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளதுடன். ஜம்முவுக்கு வந்த நிலைமை நாளை தமிழகத்துக்கும் வராது என்பது என்ன நிச்சயம் என்று கேள்வி எழுப்பி  மத்திய அரசை சாடி வருகின்றனர். 

இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வர உள்ளார் , அவரின் வருகை தமிழக அரசியல் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது 

அதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட வருகை தருகிறார் என்றும், அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

எல்லா மாநிலங்களிலும் வெற்றி கொடி நாட்டிவரும் பாஜகவால் தமிழகத்தில் பெயரளவிற்கு கூட காலுன்ற முடியவில்லையே என்ற சோக நெருப்பு  பாஜகவின் முன்னணி தலைவர்கள் நெஞ்சில் கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர், அப்படி உள்ள நிலையில் அமித்ஷா ஒரு மாநிலத்திற்கு அடிக்கடி வருகிறார் என்றால் அம்மாநிலத்தை அவரின் டார்கெட் லிஸ்ட்டில் வைத்துள்ளார் என்று அர்த்தம் என்று அமித்ஷாவை அறிந்தவர்கள் சொல்லும் தகவலாக இருக்கிறது. தமிழகத்தை என்ன செய்ய உத்தேசம் அமித் ஷா ஜீ...