Asianet News TamilAsianet News Tamil

அலண்டு கிடக்கும் அரசியல் கட்சிகள்... அல்லுதெறிக்கவிடும் அமித்ஷா!! பிஜேபியின் நெக்ஸ்ட் டார்கெட்?

பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கைப்பற்றவும், அந்த மாநிலங்களில் உள்ள ஆளும்கட்சிகளின் அஸ்திவாரத்தையே அலறவைக்கும் பிளானில் குதித்தது.  

Amithshaa Next target MP and Rajastan
Author
Karnataka, First Published Jul 24, 2019, 12:17 PM IST

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பிஜேபி கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை  கைப்பற்றியது. யாருடைய தயவும் இல்லாமல் தனியாக அவையில் உள்ளதால் அப்படியே பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கைப்பற்றவும், அந்த மாநிலங்களில் உள்ள ஆளும்கட்சிகளின் அஸ்திவாரத்தையே அலறவைக்கும் பிளானில் குதித்தது.  

Amithshaa Next target MP and Rajastan

இதன் முதல்கட்டமாக கர்நாடகாவில் கூட்டணி தயவில் ஆட்சி நடத்தி வந்த குமாரசாமி தலையில் கைவைத்து பிஜேபி, நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடையை கட்டினார். இதனையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் பிஜேபியின் எடியூரப்பா புதிய முதல்வராக மீண்டும் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கின்றனர். 

Amithshaa Next target MP and Rajastan

இதே போல் இன்னும் ஒரு சில மாநிலங்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து அந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பிஜேபி  ஆட்சி அமைக்க பாஜக தலைமை திட்டம் போட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

இதனால் பிஜேபி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமித்ஷா மீண்டும் தனது வேட்டையை தொடங்குவார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே 17 மாநிலங்களில் பிஜேபி ஆட்சியில் உள்ளநிலையில், நேற்று கர்நாடகாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிஜேபி வெற்றிபெற்றதால், தற்போது ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 18 மாநிலங்களாக உயர்ந்துள்ளது.     

Follow Us:
Download App:
  • android
  • ios