அரியானா மாநிலத்தில் வரும் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.  அரியானாவில் உள்ள படேகாபாத்  மாவட்டத்தின் தோஹானா, சிர்சா மாவட்டத்தின் எல்லெனாபாத் மற்றும் ஹிசார் மாவட்டத்தின்  நர்நாடு பகுதிகளில் பிஜேபி  சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த 3 பிரசார கூட்டங்களிலும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று பேச இருந்தார். இந்நிலையில் , உடல்நலக்குறைவு காரணமாக அமித் ஷாவால் இந்த பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க இயலவில்லை என சிர்சா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா டக்கல் பத்திரிக்கைகளுக்கு தெரிவித்தார். 

அமித்ஷா இல்லாத நிலையில் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தோஹானா மற்றும் எல்லெனாபாத்தில் நடந்த தேர்தல் பேரணிகளில் உரையாற்றினர் எனவும் தெரிவித்தார்.