முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது இதற்காக அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட விரும்பவில்லை. 

இந்த வெற்றிடத்தை நிரப்ப பாஜக தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்தார். என்னைப் பொறுத்தவரை நல்லவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிய அவர்,  ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்தார்.  

மேலும், ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்று விரும்பினால் அதை முழுமனதுடன் வரவேற்போம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.