மேற்கு வங்காளத்தில் மம்தாவை வீழ்த்தி எப்படியும் பாஜக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதில் பாஜக முனைப்பில் உள்ளது. இதற்காக மம்தாவைத் திணறடிக்க பல உத்திகளை பாஜக வகுத்து வருகிறது. மத்தியில் உள்ள பாஜக,  ‘மிஷன் பெங்கால்’ என்ற உத்தியை வகுத்து செயல்பட்டுவருகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி கட்சியிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

 
இதற்கிடையே இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் அந்த கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். மேலும் திரிணாமூல் காங்கிராஸைச் சேர்ந்த ஒரு எம்பியும் பாஜகவில் இணைந்தார். மேற்குவங்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கலக்கத்தில் உள்ளது.