தமிழக அமைச்சரவையை சேர்ந்த தங்கமணி, வேலுமணி என இரண்டு மணிகள் சமீபத்தில் டெல்லி சென்றனர். அபீஸியலாக இதற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட அன் அபீஸியலாக அதற்கு சில காரணங்கள் அதிகம் இருந்தன. அதாவது தமிழக அரசியலில் எடப்பாடி டீம் செய்ய வேண்டிய சில அஸைன்மெண்டுகள் இவர்கள் இருவரின் கைகளில் திணித்து அனுப்பியிருக்கிறது டெல்லி லாபி. 

இது ஒரு புறமிருக்க, கூடிய விரைவில் தமிழக முதல்வரும் ஒரு நடை டெல்லிக்கு போய் வரப்போகிறாராம். அவரை கிளம்பி வரச்சொன்னதே டெல்லி லாபிதான் என்கிறார்கள். அதுவும் சாதாரணமாக சொல்லாமல், சற்றே கடுப்பேறிய வார்த்தைகளுடன் இந்த உத்தரவு வந்திருக்கிறது என்கிறார்கள்.

 

காரணங்கள்?... டெல்லிக்கு இரண்டு அமைச்சர்களும் வரும் முன்னரேயே எடப்பாடி டீமுக்கு  ’நீங்க இங்கே வரும்போது தமிழக அரசியல் சூழல், நம் கூட்டணி அமையும் பட்சத்தில் லோக்சபாவில் எத்தனை இடங்களை எங்களுக்கு ஒதுக்குவீங்க, அதில் எந்த தொகுதிகளெல்லாம் எங்களுக்கு தருவீங்க, ஸ்டாலினின் தேர்தல் வியூகங்கள் எப்படியிருக்கும், அதை உடைக்க என்னென்ன வழிகள், நம்ம கூட்டணியில் யாரையெல்லாம் இணைத்தால் பலம் கிடைக்கும்?’ என்ற கேள்விகளை கொடுத்து அதற்கு பக்கா பதிலோடு வரச் சொல்லியிருந்தார்களாம். அமைச்சர்களும் இந்த பதில் ஃபைலை டெல்லியில் கைமாற்றி இருக்கிறார்கள். 

அந்த ஃபைல் அமித்ஷாவின் கைகளுக்குப் போய், அவரும் வாசித்துப் பார்த்திருக்கிறார். பார்த்தவர் கடுப்பாகிவிட்டாராம். காரணம் எந்த கேள்விக்கும் முழுமையான பதிலில்லையாம். லோக்சபா தேர்தலுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி.க்கு அவர்கள் ஒதுக்க முன்வந்திருக்கும் இடங்களும் மிக குறைவானதாக இருப்பதோடு, தி.மு.க. மிக மிக வலுவான தொகுதிகளாகப் பார்த்து தள்ளிவிட்டிருக்கிறார்களாம், மேலும் ஸ்டாலினின் தேர்தல் முழுக்க முழுக்க பி.ஜே.பி.யை பாதிப்பதாகவே இருக்கும் எனும் குறிக்கோளுடன் பதில்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது! என்றும் டெல்லி லாபி நினைக்கிறதாம். 

இதனால் கடுப்பான அமித் டீம், எதற்கு அமைச்சர்களிடம் டீல் செய்ய வேண்டும்? அந்த முதல்வரை கிளம்பி வரச்சொல்லு, அவர்கிட்ட வெச்சுக்கிறேன் கச்சேரியை! எனும் ரீதியில் உத்தரவிட்டுள்ளாராம். அமைச்சர்கள் தந்த பதிலில் அமித் அதிகம் கடுப்பானது, ’தி.மு.க.வின் அரசியல் அதிரடிகள் பி.ஜே.பி.யைத்தான் பாதிக்கும்.’ என்ற்கிற விஷயங்கள் தான் என்கிறார்கள். சிங்கத்து மூஞ்சி முன்னாடி நின்னு ‘நீ அசிங்கம்!’ன்னு சொல்றதெல்லாம் புத்திசாலித்தனமா என்ன?