பீகாரை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வில்லன் ராமி ரெட்டி, இயக்குநர் சந்தான பாரதி ஆகியோரை போட்டோக்களை போட்டு அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.

பீகாரை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வில்லன் ராமி ரெட்டி, இயக்குநர் சந்தான பாரதி ஆகியோரை போட்டோக்களை போட்டு அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவமான அமித் ஷாவுக்கு இன்று பிறந்த தினம். அவரது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந் நிலையில் எம்எல்ஏ ஒருவர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பது பெரும் வைரலாகி இருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

பிறந்த நாள் போட்டோவில் அமித் ஷா போட்டோ போடுவதற்கு பதிலாக பிரபல தெலுங்கு பட வில்லன் ராமி ரெட்டி போட்டோவை போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த எம்எல்ஏ பெயர் சுரேந்தர பிரசாத் யாதவ். பீகாரை சேர்ந்த பெலகானி தொகுதி எம்எல்ஏ. முன்னாள் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஜெகனாபாத் தொகுதியின் எம்பியாகவும் பதவி வகித்தவர்.

ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில் அமித் ஷா போட்டோவுக்கு பதில் தெலுங்கு பட வில்லன் ராமி ரெட்டி போட்டோ போட்டு பதிவிட்டு உள்ளார்.

இது குறித்த தகவல் வேகமாக பரவ, தன் தவறை உணர்ந்த அவர் மீண்டும் ஒரு போட்டோவை போட்டு வாழ்த்து கூறியுள்ளார். அந்த வாழ்த்தில் கூறி இருப்பதாவது:

என்னை மன்னியுங்கள். இடைத்தேர்தலின் பரபரப்பான பிரச்சாரத்தில் இந்த தவறை செய்துவிட்டேன். எங்களின் அற்புதமான தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த பதிவை பார்த்தவர்களும் கலகலவென சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். காரணம்… இம்முறை அமித் ஷா போட்டோவுக்கு பதில் தமிழ்பட இயக்குநர் சந்தானபாரதி போட்டோவை போட்டு இருக்கிறார். அவரது பதிவு வைரலாக வழக்கம் போல் நெட்டிசன்கள் கமெண்டுகளினால் டுவிட்டர் பதிவை பிரித்து மேய்ந்து வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…