Asianet News TamilAsianet News Tamil

ஜனவரி 14ஆம் தேதி மீண்டும் சென்னை வருகிறார் அமித்ஷா.. முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு முடிவு..?

ரஜினி அரசியல் களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஏற்கனவே நவம்பர் 21 ஆம் தேதி அமித்ஷா சென்னை வந்தார். தற்போது ரஜினி அரசியல்  முடிவு பாஜக மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,

Amit Shah is coming back to Chennai on January 14 .. Chief Ministerial candidate controversy ends ..?
Author
Chennai, First Published Jan 4, 2021, 12:05 PM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 14ஆம் தேதி மீண்டும் சென்னை வருகிறார்.  இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வருகையின் போது அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக  சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை சந்திப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான வியூகங்களும், காய்நகர்த்தல்களும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஜனவரி 14ஆம் தேதி முக்கிய முடிவெடுப்பார் என கூறப்படுகிறது. 

Amit Shah is coming back to Chennai on January 14 .. Chief Ministerial candidate controversy ends ..?

ரஜினி அரசியல் களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஏற்கனவே நவம்பர் 21 ஆம் தேதி அமித்ஷா சென்னை வந்தார். தற்போது ரஜினி அரசியல்  முடிவு பாஜக மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமித்ஷாவின் தமிழக வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவர் அதிமுக-பாஜக  இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சட்டசபை தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்தும் அவர் விசாரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

 Amit Shah is coming back to Chennai on January 14 .. Chief Ministerial candidate controversy ends ..?

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக அதில் 38 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் தமிழக பாஜக தேசியத் தலைமைக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும் புறப்படுகிறது. இந்நிலையில் அமித்ஷா வருகை பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios