அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க உள்துறை அமைச்சரும் அப்போதைய பாஜக தலைவருமான அமித் ஷா வந்திருந்தார். அது தான் பாஜக தலைவரான பிறகு தமிழகத்தில் அரசியல் ரீதியாக அமித் ஷா மேற்கொண்ட முதல் பயணமாகும். அதற்கு முன்னர் பாஜக தலைவராக இருந்த போது தேர்தல் பிரச்சாரங்களுக்கு கூட அமித் ஷா சென்னை பக்கம் வரவில்லை. ஒரு முறை அவர் சென்னை வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று பின்னர் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் கடந்த முறை சென்னை வந்த போது கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் அப்போத அந்த ஆலோசனை பெரிய அளவில் எந்த முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தவில்லை. 

ஆனால். இந்த முறை அப்படி இல்லை விரைவில் தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டி இருக்கிறது. ஆகையால், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்;- அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் அமித்ஷா. இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித் ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றார். மேலும், சிவகாசியில் உற்பத்தியாகும் உலகளவில் ஏற்றமதி செய்ய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குரல் கொடுப்போம். பட்டாசு தொழிலை பாதுகாக்க நிரந்தரமாக உயர்மட்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.