கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 4 நாட்களாக சோர்வு மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது. கொரோனாவிற்கு பிந்தைய பராமரிப்புக்காக அவர் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார். மருத்துவவனையில் இருந்து தனது பணியைத் தொடர்வார்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் ஹரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் மீண்டும் அமித்ஷாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.