amit sha banner removed from merina
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் பயணமாக நாளை மறுநாள் தமிழகம் வருகை தர உள்ளார். 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வரும் அவருக்கு, தமிழக பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
சென்னை வரும் அமித்ஷா, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தல் டிஜிட்டல் நூலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடபட உள்ளார். பின்னர், அமித்ஷா, விமானம் மூலம் கோவை செல்கிறார்.
அமித்ஷா, வருகையில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தமிக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
அமித்ஷாவுக்கு, பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கும் வகையில் தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக சென்னை, நகரம் முழுதும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50 அடி உயர பேனரை காவல் துறையினர் அகற்றியுள்ளனர். மேலும், அமித்ஷாவை வரவேற்று காமராஜர் சாலையில் 50 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த 3 பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன.
