Asianet News TamilAsianet News Tamil

தீபா, தீபக்கை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்... அம்ருதா கூடுதல் மனு தாக்கல்! 

amirtha claims that deepa and deepak should be included in her case
amirtha claims that deepa and deepak should be included in her case
Author
First Published Dec 22, 2017, 1:40 PM IST


ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி அம்ருதா தாக்கல் செய்த வழக்கில், ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோரி, அம்ருதா கூடுதல் மனு தாக்கல்
 செய்துள்ளார். 

ஜெயலலிதா மகள் என்று கூறி அம்ருதா தொடந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில கேள்விகளையும் முன்வைத்தது.  இந்த வழக்கில், அம்ருதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி வாதிட்டார். 

அம்ருதா  தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக,  ஜனவரி 5ஆம் தேதி  அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த மனுவில், ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து டி.என்.ஏ  பரிசோதனை நடத்த வேண்டும் என்று அம்ருதா தரப்பில் கோரப்பட்டிருந்தது. 

முன்னதாக,  அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,  டி.என்.ஏ சோதனை முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், மனு விசாரணைக்கு ஏற்புடையதா என பார்க்க வேண்டும் என்று கூறியது. இது குறித்து பதிலளித்த அரசு வழக்கறிஞர்,  இறந்தவர்களுக்கும் தனிப்பட்ட அந்தரங்க சுதந்திரம் உள்ளது என்று கூறினார். 

மேலும், அம்ருதா தாக்கல் செய்த மனு முழுக்க முழுக்க கற்பனைகள் நிறைந்தது என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.  

இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் தம் வாதத்தில் முன்வைத்ததில்,  இறந்தவர்களுக்கும் தனிப்பட்ட அந்தரங்க சுதந்திரம் உள்ளது 
ஜெயலலிதா பெங்களூரு வரும்போது தன்னை சந்திப்பார் என அம்ருதா கூறுகிறார்... ஆனால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறினார். 

இதற்கு அம்ருதா தரப்பு வழக்கறிஞர் பதிலளித்த போது,  விளம்பரத்திற்காக வழக்குப் போடவில்லை; வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளது என்று  உறுதி படக் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios