இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப்  இந்தியாவிலுள்ள கலை ,  கலாச்சாரம் ,  அமைதி  போதிக்கும் சமர்மதி ஆசிரமம் , மற்றும்  ஆன்மீக நிறைந்த பன்பாடு  என  இந்தியாவை  கண்டு  அவருக்குள் இந்தியா குறித்து நல்ல மனமாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி  மற்றும் மகள் இவான்காவுடன் இந்தியா வந்துள்ளார் . இந்தியாவுடன் எப்போதுமே ஏட்டிக்கு போட்டி என்ற நிலையில் இருந்துவந்த  அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானுடன்  அதிக நெருக்கம் காட்டி வந்தது . இந்நிலையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று முதல்முறையாக அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகை தந்துள்ளார்.

 

அதுமட்டுமல்லாது மனைவி மகள் என குடும்பத்துடன் சர்வதேச பயணம் மேற்கொள்வதும்  இதுவே முதல் முறை ஆகும்.  முன்னதாக இந்தியா குறித்து மேம்போக்கான மனநிலையிலிருந்து இருந்துவந்த அதிபர் ட்ரம்புக்கு  இந்தியாவின் வருகை நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  அவர் இந்தியா வந்து இறங்கியவுடன் அவருக்கு பாரம்பரி முறைப்படி உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அங்கிருந்து புறப்பட்ட அவர்,  மகாத்மா காந்தியடிகளில்  அமைதி, அறம்  போதிக்கும் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார் ,  அங்கே மகாத்மா காந்தியின்  எளிமையான வாழ்க்கை , மற்றும் ஒழுக்கத்தை போதித்த குரங்கு பொம்மைகள்  உள்ளிட்டவைகளை நேரில் பார்த்து வியந்த ட்ரம்ப் இந்தியாவின் எளிமையால் நெகிழ்ச்சியடைந்தார். 

 

இந்தியாவினுடைய பண்பாடு,  கலாச்சாரம் மற்றும்  அவர்  அங்கு கண்டகாட்சிகள் இந்தியாவின் மீது நன்மதிப்பையும் மரியாதையையும் உருவாக்கியுள்ளது.   எப்போதும் அமைதியையும் சமாதானத்தையும் போதிக்கும் நாடு இந்தியா என்ற என்பதை அவர் இதன் மூலம் அவர் உணர்ந்து கொண்டதாக தெரிகிறது . அவருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு மற்றும்  இந்தியாவில் கலாச்சாரம் அமைதி உள்ளிட்டவை ட்ரம்ப்  மனதில் இந்தியாவில் குறித்த கண்ணோட்டத்தையே மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது .  இந்தியாவின் மீது அவருக்கு நல்ல அபிப்ராயத்தையும் எண்ணத்தையும்  உருவாகி இருக்கிறது.  அவர் இந்தியாவிற்கு நேரில் வந்ததன்  மூலம் இந்தியாவின் அமைதியையும் அன்பையும் கலாச்சாரத்தையும் அவர் புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது .  இதுநாள்வரை இந்தியாவின் மீது பாகிஸ்தான் கூறிவந்த பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை  இந்த பயணத்தில் மூலம் ட்ரம்ப்  உணர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.