அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரும் 24ம் தேதி இந்தியா வருகை தர உள்ளார் .  வெள்ளை மாளிகை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ,  இந்தியா வருகை தொடர்பாக இந்திய அமெரிக்க தூதரகம் மூலம் பேச்சுவார்த்தைகள்  நடைபெற்றது.  இந்நிலையில்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 16ம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.  கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் . 

அப்போது அமெரிக்க அதிபரும் மோடியும் கைகளை பிணைத்துகொண்டபடி  கூட்டத்தின் மத்தியில்  வலம் வந்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது .   இந்நிலையில்  ஒரு முறையாவது  இந்தியா வர வேண்டும் என அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்புக்கு  இந்தியா அழைப்பு விடுத்தது , ஆதாவது மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ,  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ,  ஆகியோர் அமெரிக்க மந்திரிகளான மார்க் எஸ்பர், மைக் பாப்மேயை சந்தித்து இந்திய வருகை தொடர்பாக அழைப்பு விடுத்தனர் . இந்நிலையில் முதல் முறையாக  2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார் .  அவர் 24ஆம் தேதி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .  இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , 

அமெரிக்க அதிபர் தன் மனைவி மெலோனியாவுடன் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்,   பயணத்தின்போது அவர் டெல்லி மற்றும் அகமதாபாத் செல்வார் அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுவார் பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் . ட்ரம்பின் இந்த பயணம் மூலம் இந்திய அமெரிக்க உறவு மேலும் வலுப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது .  அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட முதல் முறையாக ட்ரம்ப் இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது .அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே அவர்  இந்தியா வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர் மோடியுடன் இணைந்து அகமதாபாத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் அவர்  பங்கேற்கிறார் என்பது குறிப்பிடதக்கது.