வேல் யாத்திரையின்போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாதது குறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் செய்தியாளர்கள் மீது கோபம் தெரிவித்துள்ளார்.   

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவித்தார். என்னினும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும் தான் ஏற்கனவே அறிவித்தபடி கடந்த ஆறாம் தேதி தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கியதால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னையில் தடையை மீறி எல். முருகன் உள்ளிட்ட பாஜகவினர் நேற்று வேலை யாத்திரை தொடங்கி நடத்தினார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

அந்த ஆம்புலன்ஸ் மேறகொண்டு செல்ல முடியாததால் ஆம்புலன்ஸ் சைரன் சப்தத்தை எழுப்பியபடியே இருந்தது. தொடர்ந்து அரை மணி நேரம் அங்கேயே நின்றது அங்குபோக்குவரத்து நெரிசல் சீரான பிறகே ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் தமிழக அரசு தடை விதித்துத் யாத்திரையை தொடர்ந்து நடத்துவது மட்டுமின்றி உயிர்காக்க வாகனமான ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் யாத்திரை நடத்துவதா என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். யாத்திரைக்கு தடை விதித்துள்ள நிலையில் போக்குவரத்து காவலர்கள் வேல் யாத்திரைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆம்புலன்ஸுக்கு பாஜகவினர் வழிவிடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மறுத்துள்ளார். 

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரையின் மூன்றாம் நாள் பயணத்திற்காக கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கிளம்பிய பாஜக தலைவர்எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மூன்றாவது நாளாக யாத்திரையை துவக்கியுள்ளோம். வெற்றிகரமாக யாத்திரையை முடிப்போம் என்றார். யாத்திரையின் போது ஆம்புலன்ஸ் வாகனம் வழிவிடாமல் காக்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து எழுப்பிய கேள்விக்கு எல்.முருகன் கோபமாக. அது எங்களுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் தான் என்றும், கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கேட்கக் கூடாது எனவும் ஆவேசமாக பதிலளித்து விட்டு செய்தியாளர் சந்திப்பை அவசரமாக முடித்துவிட்டு யாத்திரைக்கு புறப்பட்டார்.