டெல்லியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேரன், பிரகாஷ் அம்பேத்கரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை ரவிக்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து பேசிய பிரகாஷ் அம்பேத்கர், திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நாளை பேரணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்த தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று திருமாவளவன் அறிவித்தார்.  ஒரே நாடு ஒரே குடியுரிமை பேரணியில் 4ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்சிஆர் சட்டங்களை எதிர்த்து மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். அந்த பேரணியின் தலைவராக புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்கள் கலந்து கொள்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் கணிசமாக பங்கேற்கிறார்கள்’’என அவர் தெரிவித்தார்.