Asianet News TamilAsianet News Tamil

கூட்டணியில் ரங்கசாமி இல்லைன்னாலும்..! அடித்து தூக்கும் அதிமுக- பாஜக..!

காங்கிரசின் கோட்டையாக விளங்கிய புதுச்சேரியில் இப்போது பாஜகவின் தாமரை மலர்வது உறுதியாகி வருகிறது. அங்கு என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வராவிட்டாலும் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என சர்வே முடிவுகள் அடித்துக் கூறுகின்றன. 
 

Although the NR Congress is not in the alliance, the winning AIADMK-BJP alliance
Author
Tamil Nadu, First Published Mar 8, 2021, 10:23 AM IST

காங்கிரசின் கோட்டையாக விளங்கிய புதுச்சேரியில் இப்போது பாஜகவின் தாமரை மலர்வது உறுதியாகி வருகிறது. அங்கு என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வராவிட்டாலும் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என சர்வே முடிவுகள் அடித்துக் கூறுகின்றன. 

புதுச்சேரியை கைப்பற்ற வேண்டும் என்பதே அமித் ஷாவின் திட்டம். இதற்காகவே, சமீபத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலரை பா.ஜ.க, தன் பக்கம் இழுத்தது பாஜக. என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பாஜக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் களம் காணும் என எதிர்பார்த்த நிலையில், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாரகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Although the NR Congress is not in the alliance, the winning AIADMK-BJP alliance

ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, புதுச்சேரியில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என அறிவித்து விட்டு கடைசியில் அந்த கட்சியை கழற்றிவிட்டவர் இந்த ரங்கசாமி. அதேபோல் இப்போதும் ரங்கசாமியின் செயல்பாடு அமைந்துள்ளது. ஆனாலும் ரங்கசாமி கூட்டணிக்கு வராவிட்டாலும் பாஜகவும், அதிமுகவும் அமைத்துள்ள கூட்டணி அமோக வெற்றி பெறும் என பெங்களூருவை சேர்ந்த ரெனைசென்ஸ் பவுண்டேசன் புதுச்சேரியில் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன் சர்வே எடுத்த முடிவுகளை அறிவித்துள்ளது.Although the NR Congress is not in the alliance, the winning AIADMK-BJP alliance

 அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிடால் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடியும். அதேவேளை பாஜக - அதிமுக கூட்டணி 23 இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒரு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என அந்த் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios