அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக உடன்பாடு செய்து கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் அமைச்சர்களான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக - பாமக தரப்பில் நடக்கும் முதல் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கையெழுத்திட்டார். அதிமுக சார்பில்அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.  

அதன் படி 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆகிய தொகுதிகளில் பாமக களமிறங்குகிறது. 2009ல் அதிமுக கூட்டணியில் இடபெற்ற பாமகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அப்போது அந்த தேர்தலில் பாமக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. 

பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இணையான வலுவான கூட்டணியை அதிமுக உருவாக்கி உள்ளது. கடந்த 2011-ல் அதிமுக ஆட்சியமைத்தது முதலே, அக்கட்சியையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்த பாமக தலைமை தற்போது கூட்டணி அமைக்க பேசிவருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.