மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று 100 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது தொகுதி வாரியாக மக்கள் நீதிமய்யத்தின் வளர்ச்சி குறித்து கமல்ஹாசன் மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தேர்தல் பரப்புரைக்கு செல்ல வாகனமும் தயார் நிலையில் வைத்துள்ளார் கமல்ஹாசன். அந்த சிவப்பு நிற பரப்புரை வாகனம் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து திமுக மற்றும் அதிமுக வுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி இல்லை என்பது உறுதியாகி உள்ளது. திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் வேறு எந்த கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே சமீபத்தில் இக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும், கூட்டணியை முடிவு செய்யும் முழு அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.