சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் என அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸிடம் ரஜினி கட்சி கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ராமதாஸ், ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி வைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்படும். எனத் தெரிவித்துள்ளார். தற்போது பாமக அதிமுக கூட்டணியில் இருக்கிறது. முன்னதாக, ‘நாங்கள் அதிமுக கூட்டணியில் உள்ளோம் தமிழருவி மணியன் எங்களை பற்றி பேச கூடாது. எந்த முடிவும் மருத்துவர் அய்யா ராமதாஸ் எடுத்துக் கொள்வார்' என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ராமதாஸ் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்து இருப்பது கூட்டணி அமையலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதே பாமக ராமதாஸ் தான் ரஜினியைப் பார்த்து ஒரு முறை ’குட்டையில் விழுந்து கிடக்கிற சேரும் சகதியுமாக இருக்கிற பன்றி’என்று குறிப்பிட்டார். சிகரெட் பிடித்து தமிழக இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக தெரிவித்தார். ராமதாஸ்  எப்படி ரஜினி உடன் கூட்டணி வைப்பார் என்கிற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என்கிற அரசியல் நிலைப்பாட்டை நிரூபித்து இருக்கிறது பாமக.