நடிகர் ரஜினி கட்சி துவக்கியதும், அவருடன் கூட்டணி அமைக்க, பத்திரிகையாளர்களின் யோசனையை ஏற்கிறேன். இல்லை இல்லை... அது குறித்து யோசிக்கிறோம்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

ரஜினியுடன், பா.ம.க., கூட்டணி அமைக்கும் என, தமிழருவி மணியன் கூறியுள்ளாரே? என பத்திரிக்கையாளர்கல் கேளி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், ’’நீங்கள் கேட்கிற கேள்வி மிக முக்கியமான கேள்வியா..? அது முக்கியத்துவம் இல்லாத ஒன்று என்பதால், பதில் அளிக்கவில்லை.

 ரஜினியுடன், பா.ம.க., சேருவது பற்றி இப்போது, அதுபற்றி எப்படி பேசுவது; அவர் கட்சி துவக்கவில்லை. கட்சி துவக்கிய பின் கேட்டால், அது குறித்து கருத்து சொல்லலாம். தமிழருவி மணியனுக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு தோன்றியதை சொல்லி உள்ளார். இப்போது, நாங்கள் அதற்கு என்ன சொல்ல முடியும். கொஞ்சம் பொறுங்கள். முதலில், அவர் கட்சி துவக்கட்டும். கட்சி துவங்கிய பின், அவர் என்ன சொல்கிறார் என்பதை பார்த்து, பின்னர் சொல்கிறோம் எனத் தெரிவித்தார்.

 ரஜினி கட்சி துவக்கியதும், கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, ’’உங்கள் யோசனையை ஏற்கிறேன். இல்லை இல்லை... அது குறித்து யோசிக்கிறோம்.  திரைமறைவில் பேச்சு துவங்கி விட்டது என, தமிழருவி மணியன் பேட்டி அளித்துள்ளார். எந்த பேச்சும் துவங்கவில்லை. பா.ம.க., துவங்கி, 32 ஆண்டுகள் ஆகிறது. தொண்டர்களை உற்சாகப்படுத்த, ஆட்சியை பிடிப்போம் என, சொல்வது வழக்கமானது தான்’’ என அவர் கூறினார்.