அதிமுக தலைமையில்தான் கூட்டணி மீறி எதுவும் நடக்காது. 100 முறை செல்வேன் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் இது கூட்டணியினருக்கும் பொருந்தும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் துவக்க விழா நாளை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை பேட்டியளித்த அவர்;- நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே அதிமுக தலைமையில்தான் அமைந்தது. எனவே சட்டமன்ற தேர்தல் கூட்டணித் தலைமையும் அதிமுகதான். 

அதிமுக தலைமையில்தான் கூட்டணி மீறி எதுவும் நடக்காது. 100 முறை செல்வேன் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் இது கூட்டணியினருக்கும் பொருந்தும். இதை ஏற்று கொள்ளும் கட்சிகள் கூட்டணியில் இருப்பார்கள். வரும் தேர்தலில் அறுதி பெரும்பான்மையோடு அதிமுக வெற்றி பெறும்.  அமித்ஷாவும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று கூறியுள்ளார். 

மேலும், சீமான் எம்.ஜி.ஆர் வரலாற்றை தெரியாமல் பேசுகிறார்; வாழும் சகாப்தமாக எம்.ஜி.ஆர் இருந்து வருகிறார்; அவரை தொட்டான், அவன் கெட்டான். அதிமுக வை நிராகரியுங்கள் என்பது திமுகவை நிராகரியுங்கள் என்றுதான் பொருள்படும். திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பது பகல் கனவாகவும், கானல் நீராகவும் தான் போகும். ஏற்கனவே மக்கள் திமுகவை நிராகரித்தும், ஒதுக்கியும் வைத்துள்ளனர் என விமர்சனம் செய்துள்ளார்.