திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்றும் அவர்கள் வெறும் நண்பர்களே  என திமுக  பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது  திமுக தோழமை கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதே போல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஸ்டாலினை சந்தித்து  பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் – செய்தியாளர்கள் நடந்தது. அப்போது தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் என்னை வந்து சந்தித்தார்கள்.

வைகோ நடத்திய மாநாட்டில் எங்கள் பொருளாளர் நேரில் சென்று கலந்து கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடத்த இருக்கிறார்கள். அதற்கு எனக்கு அழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். நானும் வருவதாக சொல்லி இருக்கிறேன். எங்கள் கூட்டணியில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு விளம்பரம் தந்து பெருமை தந்தீர்கள். அதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

ஆனால் திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா? இல்லையா ? என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளிக்கவே இல்லை. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.