ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி, இவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். இதனிடையே சீமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டார். சீமானுக்கு விஜயலட்சுமி கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையே,  சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் மிரட்ட ல் விடுத்திருந்தார்.  இந்நிலையில் சீமானை பற்றி தினமும் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார் விஜய லட்சுமி.

 

இதற்காக சீமானின் ஆதரவாளர்கள் விஜய லட்சுமியை மிரட்டி வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற விஜய லட்சுமி, தனது முகநூல் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அனைவரும் தெரு நாய்கள்.. எனது இன்பாக்ஸில் வந்து கமெண்ட் செய்து குரைப்பதை நிறுத்துங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.