கோபாலபுரம் வீட்டிற்கு வெளியே அணைக்கப்பட்ட விளக்குகள்..!

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிரை சிகிச்சை பெற்று வரும் கலைஞாரின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என கேள்விபட்டதும், ராசாத்தி அம்மாள், முக ஸ்டாலின், கனிமொழி என அனைவரும் காவேரி மருத்துவனை  சென்று உடன் இருந்து கவனித்து வருகின்றனர்

இந்நிலையில், காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுராம் வீட்டிற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் கூடி இருப்பதால், அவர்களை களைந்து செல்லுமாறு கேட்கப் பட்டது.

எனவே தொண்டர்கள்  கலைந்து செல்ல வேண்டும் என்பதற்காக கோபாலபுரம் இல்லம் எதிரில் விளக்குகள் அணைக்கப்பட்டது.

இருந்தபோதிலும், தொண்டர்கள் அங்கிருந்து செல்வதாக இல்லை. இதே போன்று காவேரி  மருத்துவமனை வெளியிலும் தொண்டர்கள் அலைக்கடல் போன்று திரண்டு உள்ளனர்

இவர்களை கலைந்து செல்லுமாறும், கலைஞரின் உடல் நிலை சீராக உள்ளது என்றும்  ஆ ராசா தெரிவித்து  இருந்தார். காவலர்கள் எவ்வளவு போராடியும் தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவிப்பதால் மேலும் பதாற்றமான சூழல் நிலவுகிறது