பிரபல நடன இயக்குனரும், நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர் காயத்ரி ரகுராம். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார். சில நாட்களுக்கு முன்னர் தேசிய தலைவர் திருமாவளவன் ஒரு பொதுக்கூட்டத்தில், "நான் மோடிக்கு எதிரானவன். ஆனால் சில மதவெறியாளர்கள் நான் இந்து மதத்திற்கு எதிரானவன் என்பது போன்று சித்தரித்து வருகின்றனர். என்னை பின்பற்றும் 80 சதவீதத்திற்கும் மேலானோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்" என்று கூறினார்.

சம்மந்தமே இல்லாமல் காயத்ரி ரகுராம் இதற்கு பதில் அளித்துள்ளார். "சார் நடிப்பு பத்தல. கொஞ்சம் க்ளிசரின் போட்டு நடிங்க. இந்துக்கள் இவரை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிக்கணும்" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘’என்னை நேரடியாக எதிர்கொள்ள திருமாவளவனால் முடியவில்லை. எல்லா இந்துக்களும் அவருக்கு சேலை அல்ல ஒரு மடிசாரை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவன் எனது உதவியாளர் எண்ணைப் பரப்பி ஒரு பெண்ணைத் துன்புறுத்துவதில் இருந்தே அவரது தரம் தழ்ந்து விட்டது. அவர்கள் அனைவரும் இந்துக்கள் மற்றும் கடவுளைப் பற்றி இன்னும் மகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள். வெட்கமில்லாத எம்.பி.

 

எம்.பினா 5 அடி கூந்தல் இருக்குமோ..?’’ என பதிவிட்டு இருக்கும் காயத்ரி ரகுராம் தனக்கு வரும் போன்கால்களை வீடியோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.