அதிமுக பொது செயலாளர் சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதிமுக எம்எபிக்கள், எம்எல்ஏக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று காலை எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தவுடன், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கட்சியும் ஆட்சியும் ஒருவர் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எஃகு கோட்டையான அதிமுகவில் ஓட்டை போட்டுவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் பலிக்காது என ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக தெரிவித்தார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒரு மனதாக சசிகலாவை ஏற்று கொண்டார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேபோன்று, “காஷ்மீர் வொன்டர்ஃபுல் காஷ்மீர்” பாடலை பாடி நாடாளுமன்றத்தையே அசத்திய, எம்பி நவநீதகிருஷ்ணன் ஒருபடி மேலேபோய், “சசிகலா முதல்மைச்சராக பதவியேற்க உள்ளதால், ஒவ்வொரு தமிழனும் மகிழ்ச்சியில் உள்ள தாக தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் மக்கள் சேவைக்கு கிடைத்த பரிசு இது என்றும், இனி மக்களுக்கு தேவையானவற்றை சசிகலா நல்லபடியாக செய்வார் என்றும் எம்பி நவநீதிகிருஷ்ணன் தெரிவித்தார்.