சென்னையில் காவலர்கள்  அனைவரும் காலை 6 மணிக்கு  பணியில்  இருக்க வேண்டும் என்ற  உத்தரவை  சென்னை மாநகர  காவல் துறை ஆணையர்   கரண் சின்ஹா  உத்தரவு  பிறப்பித்துள்ளார்

தமிழக  அரசியலில்  ஒரு திருப்பு முனையாக , தினகரன் மற்றும்   சசிகலாவை  கட்சி மற்றும் கழகத்தில்  இருந்து   நீக்கிவிட்டு , கட்சியை வழி நடத்த   புதியதாக  ஒரு  குழு அமைக்கப்படும் என   அமைச்சர்  ஜெயகுமார்  தெரிவித்துள்ளார் .

இந்நிலையில், புதியதாக  தினகரன்   அணி  உருவாகி உள்ளதால்  அதிமுக  கட்சியானது  தற்போது  மூன்று  அணிகளாக  உள்ளது  என்றே  கூறலாம்

இதனை  தொடர்ந்து, சென்னையில்  தற்போது அசாதரான  சூழல்  நிலவுவதால் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக  இந்த உத்தரவை  காவல் துறை ஆணையர் கரண் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல முக்கிய  இடங்களில்  பாதுகாவலர்கள்  பணியமர்த்தப்படுவார்கள்  என தெரிவிக்கப் பட்டுள்ளது .

இந்நிலையில், தமிழகத்தில்  நாளை பல முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் நிலை உருவாகி உள்ளது என கணிக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற  திடீர்  உத்தரவு  என்பது  அசாதாரண  சூழல்  நிலவும்   சமயத்தில்  தான்,  திடீரென  காவலர்களை  பணியமர்த்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக  தமிழக  அரசியல்  வட்டாரத்தில்  நாளை  அதிமுக்கிய கட்சி  முடிவுகள் எடுக்கப்படும்  என எதிர்பார்க்கப் படுகிறது.