மனு தர்மம் இந்துப்பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என கூறுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  கூறியுள்ளார். பெண்களை இழிவு படுத்தும் வகையில் அதன் கோட்பாடுகள் உள்ளதாகவும் அவர் கண்டித்துள்ளார். 

இந்துமதத்தை இழிவு செய்து பிற மதங்களை உயர்வாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் திருமாவளவன் என்ற விமர்சனம் இந்து அமைப்புகளால் அவர் மீது வைக்கப்படுகிறது. இப்போது அவர் பேசிய ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில்,  ’’பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள் என இந்து மதம் கூறுவதாக அவர் விமர்சித்துள்ளார். பெண்களை மோசமாக பாவிக்கும் வகையில் இந்து மதம் கூறியிருப்பதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப்பெண்களுக்கும் தீட்டு உண்டு என இந்து மதம் கூறுவதாக அவர் கண்டித்துள்ளார்’’ அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் அவரது இந்த கருத்துக்கு சில இந்து மதத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் #திருட்டுப்பயதிருமாவளவன் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். 

 

அதிலொருவர், 'சக்தி' என்ற பெயரை ஒரு பெண்ணிற்கு இட்ட பெருமைக்குரியது எமது மதம். 'ஆணும் பெண்ணும் சமானம்' என்று "மாதொருபாகனாக" நின்றவர் எமது இறைவன். இவர் ஒரு ஒரு பிறவிப்புளுகன். விஷப்பிறவி.
'கருப்பர் கூட்டம்' என்பது விழுது. 'பெரியார் டி.வி' என்பதுதான் ஆணிவேர். ஆணிவேரை வெட்டியே ஆகணும். என கடும் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.