இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு

புதிய கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றுக்கு, கட்டாயம் நீண்ட கால மூன்றாம் நபர் வாகன காப்பீடு எடுக்கும் விதிமுறை வரும் செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. 

அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களும் கட்டாயம், நீண்ட கால மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு சேவை வழங்க வேண்டும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது வரை ஓராண்டிற்கு மட்டுமே, மூன்றாம் நபர் வாகன காப்பீடு எடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும், காப்பீட்டை புதுப்பித்து வர வேண்டும். ஒருசில பொது காப்பீட்டு நிறுவனங்கள் மட்டும், பல ஆண்டுகளுக்கு காப்பீடு வழங்குகின்றன என்பது கூடுதல் தகவல்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இரு சக்கர வாகனத்தில் செல்லக்கூடிய மபர்கள் கட்டாயம் ஹெல்மெட்  அணிய வேண்டும் என்ற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. அதுமட்டுமின்றி, பின்புறத்தில் அமரக் கூடிய நபர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காப்பீட்டு திட்டத்திலும் பல மாறுதல்களும் தற்போது கொண்டுவரப்பட உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த தகவலை அறிந்து முறையாக செய்ய வேண்டியதை செய்துக்கொள்வது நல்லது. இல்லையேல் வழி நெடுகிலும் பொலிசாரிடம் வாகன சோதனையின் போது சிக்கி தவிப்பது உறுதி ஆகி விடும்.