Asianet News TamilAsianet News Tamil

60 நாட்களில் மது போதையினால் நடைபெற்ற கொலைகள்.. லிஸ்ட் போட்ட நாராயணன் திருப்பதி!

தமிழகத்தில் அரசு எடுத்து நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி ராமதாஸ், அன்புமணி, பாஜக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Alcohol related murders in 60 days.. Listed narayanan thirupathy tvk
Author
First Published Mar 7, 2024, 3:12 PM IST

டாஸ்மாக்  கடைகளில் விற்பனையாகும் மதுவை அருந்தி போதையாகி, பின்னர் அதன் விளைவாக நடந்தேறும் கொலைகளின் குறித்த விவரங்களை நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் அரசு எடுத்து நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி ராமதாஸ், அன்புமணி, பாஜக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், 60 நாட்களில் மது போதையினால் நடைபெற்ற  கொலைகள் குறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:  தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மது போதையினால் நடைபெற்ற கொலைகள் குறித்த விவரங்களை வெளியிட்டு இவை அனைத்துமே ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் என தெரிவித்துள்ளார்.

1. போதையில் தகராறு வண்டலூரில் இளைஞர் அடித்துக் கொலை : மார்ச், 04, 2024.  

2. ஜனவரி 17, 2024,  : மது குடிக்க பணம் கேட்டு தராததால் இலைஞர் குத்திக் கொலை.

3. ஜனவரி 6,2024, வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை.

4. பிப்ரவரி 20,2024 : கிருஷ்ணகிரியில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, மனைவியும், மாமியாரும் சேர்ந்து கிரிக்கெட் பேட்டாலேயே அடித்து கொலை செய்தனர்.

5.ஜனவரி 29, 2024, அணைக்கட்டு அருகே போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அடித்து கொன்றார் நண்பர்.

6.ஜனவரி 14,2024, சென்னை : உறங்கிக் கொண்டிருந்த தன்னை தட்டி எழுப்பி மது கேட்ட குடிமகன் மீது அந்த டாஸ்மாக் ஊழியர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி.

7. பிப்ரவரி 22, 2024, உசிலம்பட்டி : மது போதையில் தகராறு - பெரியகருப்பன் கத்தியால் குத்தியதில் பாண்டி படு கொலை.

8. பிப்ரவரி 14, 2024, ஊட்டி : ஊட்டியில் மதுவுடன் சேர்த்து போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி இறந்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.

9. பிப்ரவரி 5,2024, மதுரை : "அடிச்ச போதை பத்தலை, காசு கொடு" - தாயை கொடூரமாக அடித்தே கொன்ற மகன்.

இந்த வருடம் அதாவது 60 நாட்களில் நடைபெற்ற மது போதையினால் நடைபெற்ற கொலைகளில் இது ஒரு உதாரணம் தான். 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனையாகும் மதுவை அருந்தி (கள்ளச்சாராயம் இல்லை) போதையாகி, பின்னர் அதன் விளைவாக நடந்தேறும் கொலைகளின் சிறு உதாரணமே இது. இவை அனைத்துமே ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios